

மத்திய அரசின் அமைப்பான “யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” (Union Public Service Commission) நடத்தும் முக்கியமான தேர்வுகளில், மிகவும் சிறப்பு வாய்ந்த தேர்வான “சிவில் சர்வீசஸ் தேர்வு” (Civil Services Examination) பற்றிய அறிமுகக் குறிப்புகளையும், அந்தத் தேர்வு எந்ததெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது? என்ற தகவல்களையும், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முயற்சிகள், தேர்வுக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய முறை போன்ற அனைத்து விவரங்களையும் கடந்த சில வாரங்களாகப் பார்த்தோம்.
இனி - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் மற்றுமொரு தேர்வான “இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு” (Engineering Services Examination) பற்றிய விளக்கங்களைப் பார்ப்போம்.
தமிழகத்தில் தற்போது சுமார் 600 - க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவைதவிர, சில பல்கலைக்கழகங்களும் பொறியியல் பட்டப்படிப்பை நடத்தி வருகின்றன. இந்தக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழங்களிலும் பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் படித்து சுமார் 2 லட்சம் பேர் ஆண்டுதோறும் “பொறியியல் பட்டம்” (Engineering Degree) பெறுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்குமுன்புவரை பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு எளிதில் வேலை கிடைத்தது. ஆனால், தற்போது கம்ப்யூட்டர் துறையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால், பொறியியல் பட்டதாரிகளுக்கு தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
“பி.இ., பி.டெக்., பட்டம் பெற்றவர்களுக்கெல்லாம் இப்போது நல்ல வேலை கிடைப்பதில்லை” என்றே சிலர் நினைக்கிறார்கள். முன்புபோல, ஏராளமான உடனடி வேலைவாய்ப்புகள் இல்லையென்றாலும், மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் வழக்கம்போலவே பொறியியல் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே - பொறியியலில் பட்டம் பெற்றவர்களும், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ - மாணவிகளும் அரசுத்துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன? என்பதைப்பற்றி கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆண்டுதோறும் யூ.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டுமே நடத்தப்படும் “இன்ஜினியரிங் சர்வீசஸ் எக்ஸாமினேஷன்” (Engineering Services Examination) என்னும் தேர்வு பற்றியும், அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் பற்றியும் பார்ப்போம்.
“இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வில்” (Engineering Services Examination) என்னும் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கீழ்க்கண்ட பிரிவுகளில் பணிகள் வழங்கப்படுகிறது.
I. பிரிவு - 1 - சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)
II. பிரிவு - 2 - மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)
III. பிரிவு - 3 - எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical Engineering)
IV. பிரிவு - 4 - எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Tele Communication Engineering)
- ஆகிய பிரிவுகளில் பணிகள் வழங்கப்படுகிறது.
சிவில் இன்ஜினியரிங் பிரிவில் கீழ்க்கண்ட குரூப் A (Group A) சேவைகள் அல்லது பணிகளில் வேலை வழங்கப்படும்.
(i) இந்தியன் இரயில்வே சர்வீஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (Indian Railway Service of Engineers)
(ii) இந்தியன் இரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ் [சிவில் இன்ஜினியரிங் பணிகள்] (Indian Railway Stores Service [Civil Engineering Posts[)
(iii) சென்டிரல் இன்ஜினியரிங் சர்வீஸ் (Central Engineering Service)
(iv) இந்தியன் ராணுவத் தளவாட கிட்டங்கிப் பணிகள் AWM/JTS (சிவில் இன்ஜினியரிங் பணிகள்) (Indian Ordnance Factories Service AWM/JTS [Civil Engineering Post])
(v) சென்ட்ரல் இன்ஜினியரிங் சர்வீஸ் (சாலைகள்) குரூப் A’ (சிவில் இன்ஜினியரிங் பணிகள்) (Central Engineering Service (Roads), Gr. ‘A’ (Civil Engineering Posts).
(vi) சென்ட்ரல் வாட்டர் இன்ஜினியரிங் சர்வீஸ் குரூப் -‘A’ (சிவில் இன்ஜினியரிங் பணிகள்) (Central Water Engineering Service Gr. ‘A’ (Civil Engineering Posts)
(vii) சர்வே ஆஃப் இந்தியா குரூப்-A சர்வீஸ் (Survey of India Group ‘A’ Service).
(viii) அசிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் (சிவில் இன்ஜினியரிங் பணிகள்) (சாலையோரப் பொறியியல் பணிகள் குரூப்-A (AEE (Civil Engineering Posts) in Border Roads Engineering Service Gr. ‘A’).
(ix) அசிஸ்டென்ட் எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினியர் (சிவில்) (தபால் மற்றும் தந்தி, கட்டிடப் பணிகள் குரூப் A பணிகள் (AEE (Civil) of P&T Building Works Gr ‘A’).
(x) இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (சிவில் இன்ஜினியரிங் பணிகள்) (Indian Defence Service of Engineers)
(xi) அசிஸ்டென்ட் எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினியர் (QS&C) இன் மிலிட்டரி இன்ஜினியர் சர்வீஸ் (MES) சர்வேயர் பதவி (AEE (QS&C) in Military Engineer Service (MES) Surveyor Cadre).
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் கீழ்க்கண்ட குரூப் A (Group A) மற்றும் குரூப் B (Group B) பணிகளில் வேலை வழங்கப்படும்.
(i) இந்தியன் இரயில்வே சர்வீஸ் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (Indian Railway Service of Mechanical Engineers).
(ii) இந்தியன் இரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Indian Railway Stores Service [Mechanical Engineering Posts]).
(iii) இந்தியன் இராணுவ தளவாட கிட்டங்கிகள் பணி (AWM / JTS) (மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Indian Ordnance Factories Service AWM/JTS [Mechanical Engineering Posts]).
(iv) சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அன்ட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சர்வீஸ் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Central Electrical and Mechanical Engineering Service [Mechanical Engineering Posts]).
(v) ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் குரூப்- A (Geological Survey of India Engineering Service Gr. ‘A’)
(vi) சென்ட்ரல் இன்ஜினியரிங் சர்வீஸ் (சாலைகள்) குரூப் ‘A’ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Central Engineering Service (Roads), Gr ‘A’ [Mechanical Engineering Posts]).
(vii) சென்ட்ரல் வாட்டர் இன்ஜினியரிங் சர்வீஸ் குரூப்-‘A’ (மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Central Water Engineering Service Gr ‘A’ [(Mechanical Engineering Posts]).
(viii) அசிஸ்டென்ட் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (சாலையோரப் பொறியியல் பணிகள்) குரூப் ‘A’ (AEE (Mechanical Engineering Posts) in Border Roads Engineering Service Gr ‘A’).
(ix) இந்தியன் கப்பற்படை தளவாட பணி (Indian Naval Armament Service)
(x) இந்தியன் டிபென்ஸ் சர்வீஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (Indian Defence Service of Engineers).
(xi) சென்ட்ரல் பவர் இன்ஜினியரிங் சர்வீஸ் குரூப் -‘B’ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Central Power Engineering Service Gr ‘B’ [Mechanical Engineering Posts]).
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் கீழ்க்கண்ட குரூப் A (Group A) மற்றும் குரூப் B (Group B) பணிகளில் வேலை வழங்கப்படும்.
(i) இந்தியன் இரயில்வே சர்வீஸ் ஆஃப் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர்ஸ் (Indian Railway Service of Electrical Engineers).
(ii) இந்தியன் இரயில்வே ஸ்டோர்ஸ் சர்வீஸ் (எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Indian Railway Stores Service [Electrical Engineering Posts]).
(iii) சென்ட்ரல் எலெக்ட்ரிக்கல் அன்ட் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சர்வீஸ் (எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Central Electrical and Mechanical Engineering Service [Electrical Engineering Posts]).
(iv) இந்தியன் இராணுவத் தளவாட தொழிற்சாலை பணி AWM/JTS (எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Indian Ordnance Factories Service AWM/JTS [Electrical Engineering Posts]).
(v) இந்தியன் இன்ஸ்பெக்ஷன் சர்வீஸ் [அசிஸ்டன்ட் டைரக்டர் கிரேடு´-I] (Indian Inspection Service [Assistant. Dir. Grade I]).
(vi) இந்தியன் சப்ளை சர்வீஸ் குரூப்- A (Indian Supply Service Gr. ‘A’).
(vii) அசிஸ்டன்ட் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்) தபால் மற்றும் தந்தி கட்டடப் பணிகள் குரூப் -‘A’ பணி (AEE (Electrical) of P&T Building Works Gr ‘A’).
(viii) இந்தியன் கப்பற்படை தளவாடப் பணி (Indian Naval Armament Service)
(ix) இந்தியன் டிபன்ஸ் சர்வீஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (Indian Defence Service of Engineers)
(x) சென்ட்ரல் பவர் இன்ஜினியரிங் சர்வீஸ் குரூப்-‘B’ (எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பணிகள்) (Central Power Engineering Service Gr ‘B’ [Electrical Engineering Posts]).
மேலே குறிப்பிட்ட பணிகள் போன்றே இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ‘எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகம்யூனிகேஷன்’ (Electronics and Telecommunication) பிரிவில் மொத்தம் 9 பணிகள் வழங்கப்படுகின்றன.
அவை என்ன?
............... தொடரும்