வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ரெயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

இப்பயிற்சி வகுப்பு இன்று (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.
Image Credits: AI
Image Credits: AI
Published on

தேனி,

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாடும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ரெயில்வே தேர்வு வாரியத்தின் குரூப்-டி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். இப்பயிற்சி வகுப்பு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பயிற்சி நடக்கிறது. மே விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் தேனி கலெக்டர் ரஞ்சு சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com