ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

தேர்ச்சியுற்றவர்களிடமிருந்து ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு
Published on

சென்னை,

தொழிற் பழகுநர் வாரியத்தின் ஒத்துழைப்புடன் ஒரு வருடகால பயிற்சி பெற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

நிகழ்நிலை விண்ணப்பங்கள்

தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, தொழிற் பழகுநர் வாரியம்(தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து, பட்டம்/பட்டயம் பெற்ற (CIVIL/ EEE / Arch) மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA / BSc / BCom / BBA / BBM / BCA etc) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்றவர்களிடமிருந்து ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) வரவேற்கப்படுகின்றன.

கடைசி நாள் 25.06.2026

மேலும், விவரங்களுக்கு http://nats.education.gov.in Go to Home page bottom à Regional Events à Click BOAT(Southern Region) àApprenticeship News. எனும் இணையதள முகவரியினை காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (online Application) பெற கடைசி நாள் 25.06.2026

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com