ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு தயாராவது எப்படி? - முழு விவரம்

கலை மற்றும் அறிவியல் வடிவமைப்புகளை கொண்ட கட்டிடங்களை கட்டுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள்.
ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு தயாராவது எப்படி? - முழு விவரம்
Published on

NATIONAL APTITUDE TEST IN ARCHITECTURE (NATA) என்னும் நுழைவு தேர்வு

பொதுவாக, காண்ட்ராக்டர், கொத்தனார், பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் அதிபர்கள் போன்றவர்கள் வடிவமைக்கும் கட்டடங்களை கட்டுவது இன்றும் வழக்கமாக உள்ளது.

ஆனால், நவீன தொழில்நுட்பங்களோடு, கலை மற்றும் அறிவியல் வடிவமைப்புகளை கொண்ட கட்டிடங்களை கட்டுவதை இன்று பலரும் விரும்புகிறார்கள்.

இதற்காக தனியாக கட்டடக்கலை (ARCHITECURE )என்னும் ஒரு படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் இந்த படிப்பை நடத்துகின்றன. இருந்த போதும், தி கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர் (THE COUNCIL OF ARCHITECTURE) (CoA) என்னும் அமைப்பு கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட படிப்புகளை பல கல்வி நிறுவனங்களில் நடத்துவதற்கு உறுதுணையாக அமைகிறது. தரம் வாய்ந்த கட்டடக்கலை சம்பந்தப்பட்ட படிப்புகளை வழங்குவதற்காகவே இந்த அமைப்பு நுழைவுத் தேர்வின் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து தரமான பயிற்சிகளை வழங்குகிறது.

"கட்டிடக்கலை" என அழைக்கப்படும் "ஆர்க்கிடெக்சர்" பட்டப் படிப்புகளில் சேர எழுத வேண்டிய நுழைவு தேர்வு நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர் (நேட்டா)NATIONAL APTITUDE TEST IN ARCHITECTURE (NATA) ஆகும் .

அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பி.ஆர்க் (B.Arch), மற்றும் பி.பிளானிங் (B.Planning) ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புகள் ஐந்து ஆண்டுகள் நடத்தப்படும் படிப்பு ஆகும்.

கல்வித் தகுதி.

பிளஸ் 2 தேர்வில் இயற்பியல்(PHYSICS ),வேதியியல்(CHEMISTRY ) மற்றும் கணிதம் (MATHEMATICS )ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த தேர்வு எழுத தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

மேலும், எஸ் .எஸ் .எல் .சி (S.S.L.C ) தேர்வில் வெற்றி பெற்று 3 ஆண்டு டிப்ளமோ (DIPLAMA ) படித்தவர்களும் இந்த தேர்வு எழுதலாம். இவர்கள் கண்டிப்பாக கணித பாடத்தை (MATHEMATICS ) இந்த படிப்பில் படித்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தேர்வு அமைப்பு (EXAM PATTERN)

பொதுவாக இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படும். மூன்று மணி நேரம் நடத்தப்படும் இந்த தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கும் வழக்கம் நடைமுறையில் இல்லை.

கேள்வித்தாள் அமைப்பு.

நேட்டா(NATA) எனப்படும் நுழைவுத் தேர்வில் கேள்விகள் இரண்டு வகையாக பிரிக்கப்படும். அவை பகுதி- ஏ (PART -A) மற்றும் பகுதி- பி (PART -B) ஆகும்.

பகுதி ஏ (PART -A) பிரிவு.

பகுதி- ஏ (PART -A) பிரிவை டிராயிங் அண்ட் காம்போசிஷன் டெஸ்ட் (DRAWING AND COMPOSITION TEST) என அழைப்பார்கள்.

இந்த பிரிவுக்கான தேர்வை ஆஃப்லைன் பயன்முறை (OFFLINE MODE) மூலம் நடத்துவார்கள் . அதாவது இணைய இணைப்பு ( INTERNET ) இல்லாமல் தேர்வு எழுதும் முறை இது ஆகும்.

பகுதி ஏ (PART -A) பிரிவில்-

1). A-1 என்னும் பகுதியில் காம்போசிஷன் அண்ட் கலர் (COMPOSITION AND COLOR) என்னும் தலைப்பில் 25 மதிப்பெண்களுக்கு கேள்வி இடம் பெறும்.

2) A,-2 என்னும் பகுதியில் ஸ்கெட்சிங் அண்ட் கம்போசிஷன் (SKETCHING AND COMPOSITION) என்னும் கருப்பு மற்றும் வெள்ளை) (பிளாக் AND WHITE) தலைப்பில் 25 மதிப்பெண்களுக்கு கேள்வி இடம் பெற்றுள்ளது.

3) A -3 என்னும் பகுதியில் 3D கம்போசிஷன் (COMPOSITION) என்னும் தலைப்பில் 30 மதிப்பெண்களுக்கு கேள்வி இடம் பெறும்.

மொத்தம் மூன்று கேள்விகளுக்கும் 80 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தப் பிரிவில் இடம்பெறும் மூன்று கேள்விகளுக்கான விடைகளையும் 90 நிமிடங்களுக்குள் எழுதி முடிக்க வேண்டியது அவசியமாகும்.

பகுதி- பி (PART -B) பிரிவு.

பகுதி- பி (PART -B) பிரிவை கம்ப்யூட்டர் பேஸ்டு அடாப்டிவ் டெஸ்ட் (COMPUTER BASED ADAPTIVE TEST) என குறிப்பிடுவார்கள். இந்தப் பிரிவில் இடம்பெறும் கேள்விகள் அப்ஜெக்டிவ் டைப் (MUTIPLE CHOICE TYPE QUESTIONS) வினா வகையில் அமைந்திருக்கும்.இந்தப் பிரிவுக்கான தேர்வை 90 நிமிடங்களுக்குள் எழுதி முடிக்க வேண்டும்.

இந்தப் பிரிவு ,பி-1(B -1) மற்றும் பி-2(B -2) ஆகிய இரு பகுதிகளைக் கொண்டது. இந்த பிரிவுக்கான விடைகளை 90 நிமிடங்களுக்குள் எழுதி முடிக்க வேண்டியது அவசியமாகும்.

பி -1(B -1) பகுதியில் மொத்தம் 42 கேள்விகள் இடம் பெறும். அதேபோல், பி -2(B -2) பகுதியில் எட்டு கேள்விகள் இடம் பெறும்.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் விடை அளிக்க மொத்தம் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கேள்விக்கான விடைகளை 108 வினாடிகளுக்குள் எழுதி முடிக்க வேண்டும். இந்த பகுதியில் இடம்பெறும் கேள்விகளுக்கு கட்டடக்கலை திறன் காட்சி வழி பகுத்தறிவு அல்லது கணக்கீடுகளின் அடிப்படையில் எண்ணுக்கான பதில்களை எழுத வேண்டும்.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து, 50 கேள்விகளுக்கும் மொத்தம் 120 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

பிரிவு-ஏ(PART -A) மற்றும் பிரிவு- பி (PART -B) ஆகிய இரண்டுக்கும் சேர்த்து மொத்த மதிப்பெண்கள் (80+120=200) 200 ஆகும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்.

இந்தியா முழுவதும் இந்த தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் சென்னை ,செங்கல்பட்டு ,கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாமக்கல் ,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, ஊட்டி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வு எழுத உதவும் நூல்கள்

NATA தேர்வு எழுத பல்வேறு நூல்கள் உதவியாக அமைகின்றன இருந்த போதும் சில முக்கிய நூல்களின் விவரங்கள் இதோ:

DRAWING & SKETCHING:

• DRAWING FOR ARCHITECTS [FORM, SPACE & ORDER] --BY FRANCIS D.K. CHING,

• PERSPECTIVE MADE EASY---BY ERNEST R. NORLING.

GENERAL APTITUDE & REASONING:

• A MODERN APPROACH TO VERBAL & NON-VERBAL REASONING--- BY R.S. AGGARWAL,

• ANALYTICAL REASONING---BY M.K. PANDEY.

ARCHITECTURE AWARENESS:

• A VISUAL DICTIONARY OF ARCHITECTURE---BY FRANCIS D.K. CHING,

• GENERAL KNOWLEDGE--- BYLUCENT PUBLICATIONS.

COMPREHENSIVE GUIDES:

• A COMPLETE SELF STUDY GUIDE FOR B.ARCH ---BY PK MISHRA,

• NATA & B.ARCH QUESTION BANK--- BY AR. SHADAN USMANI.

MATHEMATICS:

• NCERT MATHEMATICS (CLASS 11 & 12) FOR FUNDAMENTALS, [OBJECTIVE MATHEMATICS] ---BY R.D. SHARMA.

தேர்வு நடைபெறும் மாதம்

பொதுவாக இந்த தேர்வு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்திற்குள் நடைபெறும். இருந்தபோதும் இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் விவரங்களுக்கு….

மேலும் விவரங்களுக்கு https:)) helpdesk.nata -app.org என்னும் இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர, support@nata-app.org என்றற முகவரியிலும் தொடர்பு கொண்டு தேர்வு பற்றிய தகவல்களை பெறலாம்.

மேலும், 8956617577,8956617578 மற்றும் 8956617579 என்னும் எங்களோடு தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

கீழ்க்கண்ட முகவரியிலும் தொடர்பு கொண்டு மேலும் பல தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

COUNCIL OF ARCHITECTURE,

INDIA HABITAT CENTRE,

CORE 6A FIRST FLOOR

LODHI ROAD NEW DELHI-11003

www.coa.gov.in.

NATA HELP DESK NO:08045549467.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com