

JEE ADVANCED தேர்வுக்கு தயார் தயார் செய்ய விரும்புபவர்கள் பொதுவாக தாங்கள் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவது நல்லது. குறிப்பாக, இந்த தேர்வில் முக்கியமாக இடம்பெறும் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை மிகவும் கவனமாகவும் , அதிக நேரம் ஒதுக்கியும் படிப்பது நல்லது. சிலர், பிளஸ்- 2 படிக்கும்போது மட்டும் தங்களது தயாரிப்பு பணியை தொடங்குகிறார்கள். இதன்மூலம் பிளஸ்- 2 தேர்வுக்கான தயாரிப்பிலும், JEE ADVANCED தேர்வுக்கான தயாரிப்பிலும் ஒரே நேரத்தில் ஈடுபடலாம் என நினைத்து முழுமையான தயாரிப்பை மேற்கொள்கிறார்கள்.
இவ்வாறு தயாரிப்பை மேற்கொள்வது சிறந்தது என்றாலும், அடிப்படை பாடங்களை மிகத் தெளிவாக 6 ஆம் வகுப்பு படிக்கும்போதே தெரிந்து கொள்வது நல்லது. தெளிவாக புரிந்த பாடங்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பின்போது எளிதாக அமையும். குறிப்பாக, அந்தந்த பாடங்களில் இடம்பெறும் ஃபார்முலாக்களை மிகவும் கவனமாக மனப்பாடம் செய்து கொள்வது சிறந்த வெற்றிக்கு உதவும்.
சிலர், பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற பின்பு, பிளஸ் 1 படிக்கும்போது JEE ADVANCED தேர்வுக்கு பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இவ்வாறு பயிற்சியை மேற்கொள்பவர்கள் பிளஸ் 1 படிக்கும்போதே இயற்பியல் வேதியியல் கணிதவியல் ஆகிய பாடங்களில் உள்ள முக்கியமான கருத்துக்களை (CONCEPTS) மிக அதிக கவனத்தோடு படிக்க வேண்டும்.
நாள்தோறும் இந்தப் பாடங்களை படிக்கும்போது பாடங்களில் இடம்பெறும் சுமார் 50 க்கு மேற்பட்ட கணக்குகளை தேர்ந்தெடுத்து பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது. மேலும், வாரந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது மாதிரி தேர்வுகள் (MOCK TESTS) எழுதி, விடைகளை சரி சரி பார்க்கும் பழக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பாடத்தையும் படிக்கும்போதே குறிப்புகள் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். சில முக்கியமான பார்முலாக்களையும் தனியாக எழுதி வைத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரும்பத் திரும்ப படித்து மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வு கேள்விகளை சேகரித்து அந்த கேள்விகளுக்கான விடைகளை எழுதி பழகிக் கொள்வது நல்லது. இதன்மூலம், “எந்தெந்த பாடங்களில் உள்ள கேள்விகளுக்கு விடைகள் தெளிவாக தெரியவில்லை” என்பதை புரிந்து கொள்ளலாம். மேலும், கடினமான பாடப் பகுதியை அறிந்து கொண்டு அதிக கவனம் செலுத்தி படிப்பதற்கு இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக அமையும்.
எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பாடத்தை படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள ஒரு தெளிவான நேரத்திட்டத்தை வகுத்துக் கொள்வது நல்லது.“காலையில் எழுந்து பள்ளி செல்வதற்கே நேரமில்லை. பின்பு படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது?” என்று கேள்விகளைக் கேட்டு, தனக்குத்தானே சமாதானம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.பிளஸ் 1 படிக்கும்போதே அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக. கணிதம் இயற்பியல் பாடங்களை அதிகாலை நேரத்தில் படிப்பது நல்லது. குறைந்தபட்சம் காலையில் இரண்டு மணி நேரம் ஒதுக்கி JEE ADVANCED தேர்வுக்கு படிப்பது சிறந்தது.
பள்ளி சென்று திரும்பிய பின்னரும், மாலை சுமார் 5 மணி அளவில் JEE ADVANCED தேர்வுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் வேதியியல் பாடத்தை படிப்பது மிகவும் எளிதாக அமையும். மாலை நேரத்திலும் சுமார் 2 மணி நேரங்கள் ஒதுக்கி பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை தரும்.
இரவு நேரத்திலும் சுமார் எட்டு மணிக்கு JEE ADVANCED தேர்வுக்கு தயாரிப்பை தொடங்க வேண்டும். இந்த நேரத்தில், இயற்பியல் வேதியியல் கணிதவியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளை (PROBLEMS) கவனமாக படிக்கலாம். பொதுவாக எந்த சூழலிலும் இரவு 11 மணிக்கு மேல் படிப்பதை தவிர்ப்பது சிறந்தது.
JEE ADVANCED தேர்வுக்கு இயற்பியல் வேதியியல் கணிதவியல் பாடங்கள் முக்கிய பாடங்களாக இருந்தாலும் ஒவ்வொரு பாடத்திலும் சில பாடத் தலைப்புகள் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய தலைப்புகளாகும். அவை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இயற்பியல் பாடத்தில் MECHANICS தலைப்பில் NEWTON'S LAW,WORK-ENERGY, ROTATION,SHM ஆகிய பாட தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், ELECTROSTATISTICS மற்றும் CURRENT ELECTRICITY தலைப்பில் GAUSS LAW, CSPACITORS, KIRCHHOFF'S LAWS ஆகிய பகுதிகள் முக்கிய பகுதிகளாக கருதப்படுகின்றன.
ELECTRO MAGNETIC INDUCTION தலைப்பில் FARADAY'S LAW, LCR CIRCUITS ஆகிய பகுதிகளும், OPTICS தலைப்பில் WAVE OPTICS, RAY OPTICS, INTERFERENCE ஆகிய பகுதிகளும், MODERN PHYSICS பாடத் தலைப்பில் PHOTO ELECTRIC EFFECT, NUCLEAR PHYSICS ஆகிய பகுதிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இவை தவிர, WAVES & THERMODYNAMICS பாடத் தலைப்பில் டாப்ளர் EFFECT,LAWS OF THERMO DYNAMICS ஆகிய பகுதிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாகும்.
வேதியியல் பாடத்தில் கீழ்க்கண்ட பாடத் தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Chemical Equilibrium பாடத் தலைப்பில் Kp, Kc, Le Chatelier's Principle ஆகிய பகுதிகளும்,
Electrochemistry பாடத் தலைப்பில் Nernst Equation, Cell Reactions ஆகிய பகுதிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
Chemical Kineticsபாடத் தலைப்பில் Rate Laws, Activation Energy ஆகிய பாடப்பகுதிகளும், Thermodynamics பாடத் தலைப்பில் Enthalpy, Entropy, Gibbs Free Energy அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக கருதப்படுகின்றன.
Solutions பாடத் தலைப்பில் Colligative Properties, Raoult's Law சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதிகளாகும்.
INORGANIC CHEMISTRY பாடத்தில் கீழ்கண்ட தலைப்புகள் மிக முக்கியமாக கருதப்படுகின்றன.
1. COORDINATION COMPOUNDS
2. p-BLOCK ELEMENTS (GROUP 15,16,17,18)
3. d & f BLOCK ELEMENTS
4. CHEMICAL BONDING & MOLECULAR STRUCTURE
5.QUALITATIVE ANALYSIS (SALT ANALYSIS)
ORGANIC CHEMISTRY பாடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தலைப்புகளாக கீழ்கண்ட பாடத் தலைப்புகள் அமைகின்றன.
1. GOC (GENERAL ORGANIC CHEMISTRY)
2. ALDEHYDES, KETONES, CARBOXYLIC ACIDS
3. HYDROCARBONS (ALKENE, ALKYNE REACTIONS)
4. AMINES & NITROGEN COMPOUNDS
5. BIOMOLECULES & POLYMERS
கணிதப் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பாட தலைப்புகளும், பகுதிகளும் பின்வருமாறு.
INTEGRAL CALCULUS பாடத் தலைப்பில் DEFINITE & INDEFINITE INTEGRALS, AREA ஆகிய பகுதிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
DIFFERENTIAL CALCULUS பாடத்தலைப்பில் LIMITS, CONTINUITY, DIFFERENTIABILITY, APPLICATIONS ஆகிய பகுதிகளும் ,COORDINATE GEOMETRY பாடத்தலைப்பில் CIRCLES, PARABOLA, ELLIPSE, HYPERBOLA ஆகிய பகுதிகளும்,
VECTORS & 3D GEOMETRY பாடத்தலைப்பில் DOT/CROSS PRODUCT, LINES, PLANES ஆகிய பகுதிகளும், COMPLEX NUMBERS பாடத்தலைப்பில் ARGAND PLANE, DE MOIVRE'S THEOREM ஆகிய பகுதிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
MATRICES & DETERMINANTS பாடத்தலைப்பில் PROPERTIES, SYSTEM OF EQUATIONS ஆகிய பகுதிகளும் , PROBABILITY பாடத்தலைப்பில் CONDITIONAL PROBABILITY, BAYES' THEOREM. ஆகிய பகுதிகளும் ,DIFFERENTIAL EQUATIONS பாடத்தலைப்பில் VARIABLE SEPARABLE, LINEAR ODE ஆகிய பகுதிகளும் ,PERMUTATION & COMBINATION பாடத்தலைப்பில் COUNTING PRINCIPLES ஆகிய பகுதிகளும் SEQUENCES & SERIES பாடத்தலைப்பில் AP, GP, BINOMIAL THEOREM ஆகிய பகுதிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
JEE (ADVANCED) தேர்வுக்கான பாட தயாரிப்புக்கு உதவும் வகையில் ஏராளமான நூல்கள் உள்ளன.
இருப்பினும், சில தரமான தயாரிப்புக்கு உதவும் சில முக்கிய நூல்கள் சில;
PHYSICS நூல்கள்.
1. CONCEPTS OF PHYSICS -VOL 1 & 2 - H.C. VERMA
2. FUNDAMENTALS OF PHYSICS - HALLIDAY, RESNICK & WALKERDC 3. PANDEY SERIES - DC PANDEY
4. PROBLEMS IN GENERAL PHYSICS - I.E. IRODOV
PHYSICAL CHEMISTRY
1. PHYSICAL CHEMISTRY -O.P. TANDON
INORGANIC CHEMISTRY
1. NCERT CHEMISTRY - (11 & 12)NCERT
ORGANIC CHEMISTRY
1. ORGANIC CHEMISTRY (PROBLEMS) -M.S. CHOUHAN
1. CENGAGE MATHEMATICS SERIES -G. TEWANI
2. ALGEBRA -VINAY KUMAR
3. CALCULUS -SAMEER BANSAL / I.A. MARON
4. TRIGONOMETRY & GEOMETRY -S.L. LONEY
5. ALGEBRA -HALL & KNIGHT
6. PROBLEM PRACTICE -A. DAS GUPTA
பிளஸ் -1 மற்றும் பிளஸ்-2 படிக்கும்போது NECERT பாட நூல்களை நன்கு கற்று அந்த நூல்களில் உள்ள அடிப்படை கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படைக் கருத்துக்களை தெளிவாக புரிந்து கொண்ட பின்பு தான் கேள்விகளுக்கு சரியான முறையில் விடை அளிக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தேர்வில், குறிப்பிட்ட தலைப்புதான் மிக முக்கியம் என எண்ணி தேர்ந்தெடுத்து படிக்காமல், எல்லா தலைப்புகளிலும் உள்ள பாடங்களை தெளிவாக குறிப்பு எடுத்து படிக்க வேண்டும்.கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் இடம்பெற்ற கேள்விகளை புரிந்து கொண்டு அவற்றிற்கு பதில் எழுதுவதும் சிறந்த பயிற்சிக்கான வழிமுறையாகும்.தவறாமல் பயிற்சி மேற்கொள்பவர்கள் இந்த தேர்வில் சிறப்பான வெற்றியை கண்டிப்பாக பெற இயலும்.