

ஜே.இ.இ (JEE) என அழைக்கப்படும் தேர்வு “ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (JOINT ENTRANCE EXAMINATION)) என்பதைக் குறிக்கும். இது அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொறியியல் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தத் தேர்வை “நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி” (NATIONAL TESTING AGENCY ) (NTA) என்னும் அமைப்பு நடத்துகிறது. இந்தியாவிலுள்ள மிகப் பிரபலமான நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY) என்னும் கல்வி நிறுவனங்களிலும், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் இன்பர்மேஷன் டெக்னாலஜி (INDIAN INSTITUTE OF INFORMATION TECHNOLOGY) என்னும் கல்வி நிறுவனங்களிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கு தகுதியான மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்வாகும்.
மேலும், மத்திய அரசு நிதிஉதவிபெறும் தொழில்நுட்ப நிறுவனங்களான “சென்ட்ரல் பன்டட் டெக்னிக்கல் இன்ஸ்டிட்டியூட்” (CENTRAL FUNDED TECHNICAL INSTITUTE ) என்னும் கல்வி நிறுவனத்திலும் மாணவ, மாணவிகளை சேர்க்க இந்த “ஜாயிண்ட் என்டரன்ஸ் எக்ஸாமினேஷன்” என்னும் தேர்வு நடத்தப்படுகிறது. இவைதவிர, மத்திய அரசு நிதிஉதவி வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் தகுதியானவர்களை சேர்த்துக்கொள்ளவும் இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY)
1. NIT TRICHY (NITT), 1964
2. NIT KARNATAKA (NITK), 1960
3. NIT ROURKELA (NITRKL), 1961
4. NIT WARANGAL (NITW), 1959
5. NIT CALICUT (NITC), 1961
6. NIT NAGPUR (VNIT), 1960
7. NIT JAIPUR (MNIT), 1963
8. NIT KURUKSHETRA (NITKKR), 1963
9. NIT SILCHAR (NITS), 1967
10. NIT DURGAPUR (NITDGP), 1960
11. NIT ALLAHABAD (MNNIT), 1961
12. NIT JALANDHAR (NITJ), 1987
13. NIT SURAT (SVNIT), 1961
14. NIT MEGHALAYA (NITM), 2010
15. NIT BHOPAL (MANIT), 1960
16. NIT RAIPUR (NITRR), 1956
17. NIT AGARTALA (NITA), 1965
18. NIT GOA (NITG), 2010
19. NIT JAMSHEDPUR (NITJSR), 1960
20. NIT PATNA (NITP), 1886
21. NIT HAMIRPUR (NITH), 1986
22. NIT PUDUCHERRY (NITPY), 2010
23. NIT MANIPUR (NITMN), 2010
24. NIT ARUNACHAL PRADESH (NITAP), 2010
25. NIT SRINAGAR (NITSRI), 1960
26. NIT DELHI (NITD), 2010
27. NIT MIZORAM (NITMZ), 2010
28. NIT NAGALAND (NITN), 2010
29. NIT SIKKIM (NITSKM), 2010
30. NIT UTTARAKHAND (NITUK), 2010
31. NIT ANDHRA PRADESH (NITANP), 2015
இரண்டு நிலை தேர்வு ஜே.இ.இ. என்னும் தேர்வு இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. அவை -
1.ஜே.இ.இ. மெயின் தேர்வு (JEE MAIN EXAMINATION)
2.ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு (JEE ADVANCED EXAMINATION)
-ஆகியவை ஆகும்.
1.ஜே.இ.இ. மெயின் தேர்வு (JEE MAIN EXAMINATION)
ஜே.இ.இ. மெயின் தேர்வு, தாள்-1 (PAPER-1) மற்றும் தாள்-2 (PAPER-2) என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியதாகும்.
தாள்-1 (PAPER-1)
பி.இ (B.E.)எனப்படும் பேச்சுலர் ஆப் இன்ஜினியரிங் (BACHELOR OF ENGINEERING) மற்றும் பி . டெக் (B.Teh) எனப்படும் "பேச்சுலர் ஆப் டெக்னாலஜி" (BACHELOR OF TECHNOLOGY) ஆகிய படிப்புகளில் சேர விரும்புபவர்கள் தாள்-1 (PAPER-1) தேர்வு எழுத வேண்டும். இந்தத் தாள்-1 தேர்வில் கணிதம் (இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்." கொள்குறி வகை கேள்விகள்" எனப்படும் “அப்ஜெக்டிவ் டைப்-மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்ஸ்” (OBJECTIVE TYPE -MULTIPLE CHOICE QUESTIONS) வகையில் கேள்விகள் இடம் பெறும். அனைத்து பாடங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இந்தத் தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (COMPUTER BASED TEST (CBT) என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாள் -2 ஏ (PAPER -2A)
பி .ஆர்க் (B.Arch) எனப்படும் பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (BACHELOR OF ARCHITECTURE) என்னும் படிப்பில் சேர விரும்புபவர்கள் தாள்-2ஏ (PAPER-2A) என்னும் தேர்வு எழுத வேண்டும்.
இந்தத் தேர்வு மூன்று பகுதிகளை கொண்டது. அவை-
1. பகுதி-1: கணிதம் (PART -1-MATHEMATICS).
இந்தப் பகுதியில் கொள்கை வகை அமைப்பில் கேள்விகள் இடம் பெறும். இந்த பகுதி தேர்வும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும்.
2. பகுதி -2 ஏ-இயல் திறன் அல்லது ஆற்றல் தேர்வு (PART -2A-APTITUDE TEST)
இந்தப் பகுதியில் கொள் குறி வகை அமைப்பில் கேள்விகள் இடம் பெறும். இந்தப் பகுதி தேர்வும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும்.
3. பகுதி 3-படம் வரைதல் தேர்வு (PART -3-DRAWING TEST).
இந்தப் பகுதியில் போட்டியாளரின் படம் வரையும் திறமையை கண்டறியும் விதத்தில் கேள்விகள் அமைக்கப்படும். இந்தப் பகுதியில் பேனா மற்றும் தாள் (PEN AND PAPER)
அடிப்படையில் கேள்விகள் அமைத்து,படம் வரைந்து விடை அளிக்க வாய்ப்புகள் வழங்குவார்கள்.
தாள் -2பி (PAPER -2B)
பி. பிளானிங் (B. PLANNING) படிப்பில் சேர விரும்புபவர்கள் தாள் -2 (PAPER -2 B) என்னும் தேர்வு எழுத வேண்டும்
பி. பிளானிங் (B. PLANNING) படிப்பில் சேர மூன்று பகுதிகளில் கேள்விகள் இடம் பெறும். அவை-
1. பகுதி -1 -கணிதம் ( PART-1-MATHEMATICS).
இந்தப் பகுதியில் கொள்கை வகையான அமைப்பில் கேள்விகள் இடம் பெறும்.இந்தப் பகுதியில் கொள் குறி வகை அமைப்பில் கேள்விகள் இடம் பெறும். இந்தப் பகுதி தேர்வும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும்.
2. பகுதி -2 -இயல் திறன் அல்லது ஆற்றல் தேர்வு (PART -2-APTITUDE TEST)
இந்தப் பகுதியில் கொள் குறி வகை அமைப்பில் கேள்விகள் இடம் பெறும். இந்தப் பகுதி தேர்வும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும்.
3. பகுதி 3-திட்டமிடுதல் அடிப்படையிலான கேள்விகள் (PART -3-PLANNING BASED QUESTIONS).கம்ப்யூட்டர் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படும்
தேர்வு முறை (PATTERN OF EXAMINATION).
பி. இ, பி. டெக் ஆகிய படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜே.இ.இ.யின் நுழைவு தேர்வில் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வில் மொத்தம் 75 கேள்விகள் கேட்கப்படும். இவற்றிற்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கணிதம் பாடப்பகுதியில் செக்சன் A பிரிவில் 20 கேள்விகளும் செக்சன் B பிரிவில் 5 கேள்விகளும் இடம் பெறும். இதைப் போலவே இயற்பியல் பாடப்பிரிவில் செக்சன் A பிரிவில் 20 கேள்விகளும் செக்சன் B பிரிவில் ஐந்து கேள்விகளும் இடம் பெறும். வேதியியல் பாடப்பகுதியிலும் செக்சன் A பிரிவில் 20 கேள்விகளும் செக்சன் B பிரிவில் 5 கேள்விகளும் இடம் பெறும்.
தேர்வு கட்டணம்
தாள்-1 (PAPER-1) பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) அல்லது தாள்-2ஏ (PAPER2A) பி.ஆர்க் (B.Arch) அல்லது தாள்-2 பி (PAPER-2B) பி.பிளானிங் (B.PLANNING) ஆகிய தேர்வுஎழுதுபவர்களுக்கு தேர்வுக்கட்டணம் , ஆண்களுக்கு ரூபாய் 1,000 , பெண்களுக்கு ரூபாய் 800 ஆகும். இருப்பினும், இதர பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் (OBC-NON-CREEMY LAYER) மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவைச்சேர்ந்தவர்கள் (EWS) ஆகிய பிரிவை சேர்ந்த ஆண்களுக்கு தேர்வுகட்டணம் ரூபாய் 900 ஆகும். பெண்களுக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 800 ஆகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 500 ஆகும்
மேலும், தாள்-1 (PAPER -1) பி.இ(B.E) , பி.டெக் (B.Tech) மற்றும் தாள்-2ஏ (PAPER-2A)பி.ஆர்க் (B.Arch) ஆகிய இரண்டு தாள்களையும் சேர்த்து தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு கட்டணம் ஆண்களுக்கு 2,000 ரூபாய்.பெண்களுக்கு 1,600 ரூபாய் ஆகும். அல்லது தாள்-1 (PAPER-1) பி.இ(B.E), பி.டெக் (B.Tech) மற்றும் தாள்-2பி (PAPER-2 B) பி.பிளானிங் (B.PLANNING) ஆகிய தேர்வுகள் எழுதுபவர்களுக்கு தேர்வு கட்டணம், ஆண்களுக்கு ரூபாய் 2,000, பெண்களுக்கு ரூபாய் 1,600 ஆகும்.
அல்லது தாள் -1 (PAPER-1) பி.இ(B.E) , பி.டெக் (B.Tech) தாள்- 2-ஏ பி.ஆர்க்(PAPER -2A) மற்றும் தாள்-2 பி (PAPER-2B) பி.பிளானிங் (B.PLANNING) ஆகிய தேர்வுகள் எழுதுபவர்களுக்கு தேர்வு கட்டணம் , ஆண்களுக்கு ரூபாய் 2,000, பெண்களுக்கு ரூபாய் 1,600 ஆகும்.அல்லது தாள்-2-ஏ பி.ஆர்க் (PAPER-2A) மற்றும் தாள்-2பி (PAPER-2B) பி.பிளானிங் (B.PLANNING) ஆகிய தேர்வுகள் எழுதுபவர்களுக்கு தேர்வு கட்டணம், ஆண்களுக்கு ரூபாய் 2,000, பெண்களுக்கு ரூபாய் 1,600 ஆகும். மேலும், இதர பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் (OBC-NON-CREEMY LAYER) மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவைச்சேர்ந்தவர்கள் (EWS) ஆகிய பிரிவை சேர்ந்த ஆண்களுக்கு தேர்வுகட்டணம் ரூபாய் 2,000ஆகும். பெண்களுக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 1,600 ஆகும்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 1000 ஆகும் ஜே.இ.இ மெயின் தாள் -1(JEE MAIN PAPER-1) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் B.E, B.Tech, Integrated M.Sc, Integrated M.Tech, Integrated M.B.A, Bachelor of Science, Bachelor of Pharmaceutical மற்றும் Bachelor of Design ஆகிய படிப்புகளிலும் சேர்ந்து படிக்கலாம்.பொதுவாக, ஜே.இ.இ மெயின் தேர்வு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்
தொடர்பு கொள்ள....
இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
NATIONAL TESTING AGENCY
NSIC-MDBP BUILDING
FIRST FLOOR, OKHLA INDUSTRIAL ESTATE
NEW DELHI-110020
PHONE: 01169227700, 011-40759000
WEBSITE: https://jeemain.nta.nic.in/ E-MAIL: jeemain@nta.ac.in