ஐஐடி ’ஜாம்’ நுழைவுத்தேர்வுக்கு தயாராவது எப்படி...? - முழு விவரம்

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் இளநிலை பட்டப்படிப்பை கண்டிப்பாக முடித்து இருக்க வேண்டும்.
ஐஐடி ’ஜாம்’ நுழைவுத்தேர்வுக்கு தயாராவது எப்படி...? - முழு விவரம்
Published on

சென்னை,

ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட் பார் மாஸ்டர்ஸ் ( ஜாம் தேர்வு - JOINT ADMISSION TEST for MASTERS)

ஐ.ஐ.டி என அழைக்கப்படும்"இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (INDIAN INSTITUTE OF TECHNOLOGY) என்னும் கல்வியின் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது. 

தொழில்நுட்ப கல்வியை உலக அளவில் தரம் உயர்த்துவதற்காக இந்த இந்திய தொழில் நுட்ப கழகங்கள் உருவாக்கப்பட்டன.

பொறியியல் அறிவியல் மானுடவியல் சமூக அறிவியல் மேலாண்மை மற்றும் புதிய துறைகளில் நடைபெற்று வருகின்ற ஆராய்ச்சிகளை மேம்படுத்த இந்த கல்வி நிறுவனங்கள் பக்க பலமாக அமைகின்றன. 

ஆராய்ச்சியை மேம்படுத்தவும், அறிவியல் திறனை வளர்க்கவும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை உருவாக்கவும் இந்த ஐஐடி எனப்படும் கல்வி நிறுவனங்கள் துணை நிற்கின்றன. 

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில் (RESEARCH AND DEVELOPMENT) உலக தரத்திலான கல்வியினை வழங்குவதற்கு இந்த கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளுக்கு பெரிதும் உதவுகின்றன. 

கம்ப்யூட்டரை அடிப்படையாகக் கொண்டு பல நவீன ஆய்வகங்களை உருவாக்கி, நூலகங்களின் தன்மையை மேம்படுத்தி புதுமையான முறையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இங்கு பயிற்றுவிப்படுகிறது.

தொழில்நுட்ப பயிற்சிகளை நேரடியாக வழங்கும் விதத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே மிக நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி ஆராய்ச்சி அடிப்படையிலான அறிவு புரட்சிக்கு இந்த நிறுவனங்கள் வழி வகுக்கின்றன.

இந்த ஐஐடி எனப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கல்வி நிறுவனங்கள் "ஜாம்" (JAM) என அழைக்கப்படும் ஜாயிண்ட் அட்மிஷன் டெஸ்ட் ஃபார் மாஸ்டர்ஸ் " (JOINT ADMISSION TEST for MASTERS) என்ற நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் நடத்துகிறது. 

இந்தத் தேர்வு, முதுகலை பொறியியல் ,அறிவியல் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளில் மாணவர்களை இந்தக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்படும் தேர்வாகும். 

குறிப்பாக , எம் எஸ் சி, எம் எஸ் சி டெக், எம் எஸ் ரிசர்ச் எம்எஸ்சி மற்றும் எம் டெக் இரண்டு பட்டங்கள், எம்எஸ்சி மற்றும் பி ஹெச்டி இணைந்த படிப்பு, எம்எஸ்சி பிஎச்டி இரண்டு பட்டங்கள், ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்பு-ஆகிய படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன . இந்த படிப்புகளில் சேர்வதற்காகவே ஜாம் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கல்வித் தகுதிகள்

இந்தப் படிப்புகளில் சேர தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் இளநிலை பட்டப்படிப்பை கண்டிப்பாக முடித்து இருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் இந்த நுழைவு தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இருப்பினும், பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்கள் ,தாங்கள் பட்டப்படிப்பை வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை மாணவர் சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்

வயது வரம்பு

இந்தத் தேர்வு எழுத வயது வரம்பு கிடையாது. அதிகபட்சமாக எந்த வயது நிரம்பியவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 

நுழைவுத் தேர்வின் அமைப்பு

ஜாம்( JAM )என்னும் இந்த நுழைவுத் தேர்வில் உயிரி தொழில்நுட்பம் வேதியியல் பொருளாதாரம் புவியியல் கணிதம் கணித புள்ளியில் மற்றும் இயற்பியல் ஆகிய ஏழு தேர்வு தாள்களில் கேள்விகள் இடம் பெறும். இந்த தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக அமையும். 

இந்தத் தேர்வு மொத்தம் மூன்று மணி நேரம் நடைபெறும்

மொத்தம் 60 வினாக்கள் இடம்பெறும். அந்த 60 வினாக்களுக்கும் மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும் 

கேள்வித்தாள்A,B,C என மூன்று பிரிவுகளில் அமைக்கப்பட்டு இருக்கும்.

A. கொள் குறி வகை வினாக்கள் (MULTIPLE CHOICE QUESTIONS) (MCQ)

A பிரிவில் கொள் குறி வகை வினாக்கள் (MULTIPLE CHOICE QUESTIONS) (MCQ)அமையும். அதாவது கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் ஒரு விடையை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும். தவறான விடைகளில், ஒரு மதிப்பெண் விடைகளுக்கு மூன்றில் ஒரு பகுதியும் ( 1/3), இரண்டு மதிப்பெண்கள் விடைகளுக்கு மூன்றில் இரண்டு பகுதியும் (2/3) மதிப்பெண்கள் குறைக்கப்படும். 

B.பல தெரிவு வினாக்கள் (MULTIPLE SELECT QUESTIONS)(MSQ)

B. பிரிவில் "பல தெரிவு வினாக்கள்"(MULTIPLE SELECT QUESTIONS)(MSQ) இடம் பெறும். இந்த கேள்விகளுக்கு  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியான விடை போல தோன்றும். ஆனால் ,மிகச் சரியான விடையை தேர்ந்தெடுத்து பதில் எழுத வேண்டியது அவசியமாகும்.இந்தப் பிரிவில் இடம்பெறும் கேள்விகளுக்கு எழுதப்படும் தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது. 

c. எண் விடை வகை (NUMERICAL ANSWER TYPE) (NAT)

C பிரிவு எண் விடை வகை (NUMERICAL ANSWER TYPE) (NAT) பிரிவாகும். இந்தப் பிரிவில் இடம்பெறும்  கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் கேள்விகளுக்கு , கம்ப்யூட்டர் திரை பார்த்தே விடைகளை கம்ப்யூட்டர் விசைப்பலகை  (VIRTUAL KEYBOARD) பயன்படுத்தி விடைகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பிரிவிலும் தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது. 

நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் ஐஐடி நிறுவனங்கள் (Admitting Institutes)

1. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, BHILAI

• https://www.iitbhilai.ac.in

• chrjam@iitbhilai.ac.in 0788-2991609

• doaa@iitbhilai.ac.in

• ardoaa@iitbhilai.ac.in

• admissions@iitbhilai.ac.in

2. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, BHUBANESWAR

• https://www.iitbbs.ac.in

• chairman.jam@iitbbs.ac.in 0674-7135150

• dr.acad@iitbbs.ac.in 0674-7134578

• deanpgrp@iitbbs.ac.in 0674-7135712

3. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, BOMBAY

• https://www.iitb.ac.in

• chrgate@iitb.ac.in 022-2576 7022

• jam@iitb.ac.in 022-2576 7068

• dean.ap@iitb.ac.in 022-2576 7035

4. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, DELHI

• https://www.iitd.ac.in

• deanacad@admin.iitd.ac.in 011-26591708

• drpgsr@admin.iitd.ac.in 011-26591737

• supdtacad2@admin.iitd.ac.in 011-26597114

5. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, DHANBAD

• https://www.iitism.ac.in

• chair_admpgphd@iitism.ac.in 0326-2235265

• cadm_jam@iitism.ac.in 0326-2235266

• 0326-2235662

6. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, DHARWAD

• https://www.iitdh.ac.in

• chair.gate.jam@iitdh.ac.in 08362309612

• fic.ap.pg@iitdh.ac.in 08362309611

• dean.ap@iitdh.ac.in

• aracademic@iitdh.ac.in

7. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, GANDHINAGAR

• https://www.iitgn.ac.in

• chrgate@iitgn.ac.in 079-23952436

8. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, GOA

• https://www.iitgoa.ac.in

• chrgate @iitgoa.ac.in 0832-2490102

9. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, GUWAHATI

• https://www.iitg.ac.in

• hosacad@iitg.ac.in 0361-2582192

• acad_admission@iitg.ac.in 0361-2582751

• doaa@iitg.ac.in 0361-2582755

• adoaaug@iitg.ac.in 0362-2582198

10. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, HYDERABAD

• https://www.iith.ac.in

• acad.pg@iith.ac.in 040-23016065

• ar.acadpg@iith.ac.in 040-23016067

• hos.acad@iith.ac.in 040-23016057

• vicechair.gate@iith.ac.in

11. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, INDORE

• https://www.iiti.ac.in

• managerpg@iiti.ac.in 0731 660 3490

• deputymanagerpg@iiti.ac.in 0731 660 3598

• araa@iiti.ac.in 0731 660 3150

• jamchairman@iiti.ac.in

12. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, JAMMU

• https://www.iitjammu.ac.in

• pgoffice.acad@iitjammu.ac.in 0191-2570633

• dr.acad@iitjammu.ac.in

13. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, JODHPUR

• https://www.iitj.ac.in

• pgadmissions@iitj.ac.in 2912801079

• chairadmissions@iitj.ac.in

• admissions@iitj.ac.in

• doaa@iitj.ac.in

14. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, KANPUR

• https://www.iitk.ac.in

• admissiondesk@iitk.ac.in 0512-2592403

• adaa@iitk.ac.in 0512-2592414

• doaa@iitk.ac.in

15. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, KHARAGPUR

• https://www.iitkgp.ac.in

• arug@adm.iitkgp.ac.in 03222-282054

• vchrgate2@adm.iitkgp.ac.in 03222-282091

• deanfos@iitkgp.ac.in 03222-282094

16. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, MADRAS

• https://www.iitm.ac.in

• jam@iitm.ac.in 044-22578200

• mtechadm@iitm.ac.in 044-22578204

• drcourses@iitm.ac.in 044-22578036

17. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, MANDI

• https://www.iitmandi.ac.in

• jamchair@iitmandi.ac.in 01905-267073

• dracad@iitmandi.ac.in 01905-267058

• deanacad@iitmandi.ac.in

• acadoffice@iitmandi.ac.in

18. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, PALAKKAD

• https://www.iitpkd.ac.in

• dracad@iitpkd.ac.in 04912092035

• chairpgadm@iitpkd.ac.in 04912091109

• pgadm@iitpkd.ac.in 0491 209 2036

• 0491 209 2033

19. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, PATNA

• https://www.iitp.ac.in

• adeanacademic_ug@iitp.ac.in 06115233987

• dracademic@iitp.ac.in 06115233784

• aracademic@iitp.ac.in 06115233697

• acadmsc@iitp.ac.in 06115233773

20. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, ROORKEE

• https://www.iitr.ac.in

• adaa-admission@iitr.ac.in 01332-284010

• dracademic@iitr.ac.in 01332-285446

• aradmission@iitr.ac.in 01332-284531

• pgadmission@iitr.ac.in

• jam@iitr.ac.in

21. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, ROPAR

• https://www.iitrpr.ac.in

• deanpg@iitrpr.ac.in 01881-23 1111

• jr.acad@iitrpr.ac.in 01881-23 1176

• aracademics@iitrpr.ac.in

• jamchair@iitrpr.ac.in

22. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, TIRUPATI

• https://www.iittp.ac.in

• admissions@iittp.ac.in 0877-250-3532

• chair_admissions@iittp.ac.in

• dean_aa@iittp.ac.in

• ar_admissions@iittp.ac.in

23. INDIAN INSTITUTE OF TECHNOLOGY, (BHU) VARANASI

• https://www.iitbhu.ac.in

• chairjam@iitbhu.ac.in 0542-7165101

• office.academics@iitbhu.ac.in 0542-7165102

தொடர்பு கொள்ள....

இந்த தேர்வு பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Organizing Chairperson,

GATE-JAM Office,

IIT Bombay, Powai,

Mumbai-400076

Maharashtra, INDIA

Phone no: 022 2576 7068/7022/7035

X

Daily Thanthi
www.dailythanthi.com