ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

இதற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Image credits:AI
Image credits:AI
Published on

இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட 23 பிரிவுகளில் சுமார் 933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

தேர்வு நடத்தும் நிறுவனம்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி)

பணி இடங்கள்: 933

பதவி: ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட பல்வேறு பதவிகள்

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயது: 24-2-2026 அன்றைய தேதிப்படி 21 முதல் 32 வயதுக்குட்பட்டவர்க ளாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1994-க்கு முன்போ, 1-8-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்

முதல் நிலை தேர்வு நடைபெறும் இடங்கள் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்

மெயின் தேர்வு (தமிழ்நாடு): சென்னை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-2-2026

முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள்: 24-5-2026

X

Daily Thanthi
www.dailythanthi.com