விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அரசு தகவல்

விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அரசு தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் அறிவுரைக்கிணங்கி, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 47-வது செயற்குழு கூட்டத்தில், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி சேர்க்கைக்கான இடங்களை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில், விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி சேர்க் கைக்கான இடங்களை உடனடியாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், இதற்கான முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் 10-ந்தேதி அரசாணைப்படி, தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 7-ல் இருந்து 13 ஆகவும், பி.டி.எஸ். படிப்புக்கான இடங்கள் 1-ல் இருந்து 2 ஆகவும் விளையாட்டு ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படும் இடங்களை அதிகரித்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com