'கியூட்' மறு தேர்வு நடத்தப்படுகிறதா? தேசிய தேர்வு முகமை விள்க்கம்

‘கியூட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எழுப்பிய மனக்குறைகள் நியாயமாக இருந்தால், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
'கியூட்' மறு தேர்வு நடத்தப்படுகிறதா? தேசிய தேர்வு முகமை விள்க்கம்
Published on

புதுடெல்லி,

மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் இளநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்) கடந்த 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த ஆண்டுக்கான 'கியூட்' தேர்வு 2 மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், நேற்று தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

அதுபற்றி தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-தற்காலிக விடைக்குறிப்புகள் குறித்து தேர்வு எழுதியவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், 9-ந் தேதி மாலை 6 மணிக்குள் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம். அவர்களின் ஆட்சேபனைகள், அந்தந்த பாட நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பரிசீலிக்கப்படும். பின்னர், திருத்தப்பட்ட இறுதி விடைக்குறிப்புகள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

அதுபோல், 'கியூட்' தேர்வு நடத்தப்பட்ட விதம் தொடர்பாக கடந்த 30-ந் தேதிவரை மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட மனக்குறைகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.யாருடைய மனக்குறை நியாயமானது என்று கண்டறியப்படுகிறதோ, அவர்களுக்கு மட்டும் ஜூலை 15-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில், குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேசிய தேர்வு முகமை மறுதேர்வு நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com