

சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியான ஐ.டி.ஐ.-பிரிவுகளில் (மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல், ஆட்டோ எலக்ட்ரீஷியன், எலக்ட்ரீஷியன், பிட்டர் மற்றும் வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி பெறுவதற்கு, வருகிற 10-ந் தேதி காலை 10 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.