

புதுடெல்லி,
நால்கோ எனப்படும் தேசிய அலுமனிய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மத்திய சுரங்க துறைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணி நிறுவனம்: தேசிய அலுமினிய நிறுவனம் (நால்கோ)
பணி இடங்கள்: 268
பதவி: டெக்னீஷியன், ஆபரேட்டர், போர்மேன் மற்றும் திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சியாளர்
வயது: 10-6-2026 அன்றைய தேதிப்படி டெக்னீஷியன், ஆப்பரேட் டர் பதவிகளுக்கு 35 வயது, போர்மேன் பதவிக்கு 40 வயது, திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சியாளர் பதவிக்கு 27 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
கல்வி தகுதி:10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.எஸ்சி.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, திறனறி தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-6-2026.
இணையதள முகவரி: https://mudira.nalcoindia.co.in/rec_portal/default.aspx