மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: தேர்வு கிடையாது- உடனே விண்ணப்பிங்க

மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை:  தேர்வு கிடையாது- உடனே விண்ணப்பிங்க
Published on

புனே,

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்டின் கீழ் செயல்படும் நிறுவனம் உயர் வெடிபொருள் தொழிற்சாலை. மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்கள் வருமாறு :

பணியிடங்கள் : சூப்பர்வைசரி (கெமிக்கல்) 6, ஸ்கில்டு வொர்க்கர் 85 என மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக் உள்ளிட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 வயது முதல் 40 வயது வரை

தேர்வு முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு- எழுத்து தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ddpdoo.gov.ine என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது.

முகவரி : The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune, Maharashtra - 411 003.

விண்ணப்பிக்க கடைசிநாள் : 10.04.2026

X

Daily Thanthi
www.dailythanthi.com