மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ரூ.67 ஆயிரம் சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

ஜேஆர்எப் பணிக்கு வரும் ஏப்ரல் மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.
Image Credits: AI
Image Credits: AI
Published on

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள இந்த நிறுவனத்தில் உள்ள காலியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு:

பணியிடங்கள் விவரம்:

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (JRF) - 6

ஆராய்ச்சி உதவியாளர் (RA) - 2

கல்வித்தகுதி: ஏரோநாட்டிக்கல், மெக்கானிக்கல், சிஎஸ்இ, ஈசிஇ, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து கேட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு அதிகபட்சமாக ரூ.67 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: ஜேஆர்எப் பணிக்கு வரும் ஏப்ரல் மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆர்ஏ பணிக்கு ஏப்ரல் 9-இல் நடைபெறுகிறது.

முகவரி: Aeronautical Development Establishment, DRDO, Bangalore - 560 075.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com