கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அணு மின் நிலையத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அணுசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அணு மின் நிலையத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: பிட்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.

கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 16 வயதுக்கு குறையாதவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.9,600 கிடைக்கும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை: டிரேட் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 16.03.2026 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

https://bhavini.nic.in/upload/files/1771915938_699d4aa2cbb78.pdf

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com