நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள 171 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

கடலூர்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 171 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை கீழ் காணலாம்.

பணி நிறுவனம் : என்.எல்.சி இந்தியா லிமிடெட்

பயிற்சி பணி இடங்கள் : 171

பயிற்சி பிரிவு : ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னி), மைனிங் சிடர் (கிரேடு 1)

பணி இடம் : நெய்வேலி

கல்வி தகுதி : சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகள்

வயது : 1-4-2025 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு

தேர்வு முறை : எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14-5-2025

இணையதள முகவரி : https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com