

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு;-
பணியிடங்கள்: ஐடி பாதுகாப்பு நிபுணர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், மேலாண்மை & தடயவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 12 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி இ/ பி.டெக், எம்.இ/ எம்.டெக், எம்.எஸ்.சி, எம்.சி.ஏ
வயது வரம்பு: 25 வயது 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் உச்ச தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ.64,820 - 93,690 வரை
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.750, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி? https://sbi.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 16.03.2026 கடைசி நாளாகும்.