

கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சவுத் இந்தியன் வங்கிக்கு சுமார் 955 கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சவுத் இந்தியன் வங்கியில் தற்போது காலியாக உள்ள ஜுனியர் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள் விவரம்: ஜூனியர் ஆபிசர்/ பிசினஸ் புரோமஷன் ஆபிசர்
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வங்கி, நிதி நிறுவனங்கள் உளிட்டவற்றில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவசியம்.
வயதுவரம்பு: 02.03.2026) - தேதிப்படி 30 வயதுக்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது 01.02.1996 க்கு பிறகு பிறந்தவராக இருக்கக் கூடாது.
சம்பளம் எவ்வளவு? தேர்வு செய்யப்டும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7.56 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அதாவது மாதத்திற்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் கிடைக்கும்.
தேர்வு முறை; குரூப் டிஸ்கசன், பெர்சனல் இண்டர்வியூ அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வரும் 02.03.2026 - கடைசி நாளாகும்
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.southindianbank.bank.in/