மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்ற ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குவிண்ணபிப்பது எப்படி? எனபது பற்றிய விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்)

இடங்கள்: 612

பணியின் தன்மை: அப்ரண்டீஸ் பயிற்சி - என்ஜினீயரிங் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்)

பயிற்சி காலம்: ஓர் ஆண்டு

மாதாந்திர உதவித்தொகை: ரூ.25,000

கல்வி தகுதி: பி.இ., பி.டெக் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்).

வயது: 2-3-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 25.

அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 2-3-2026

இணையதளம் : https://www.hindustanpetroleum.com/job-openings

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com