மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை: டிகிரி கல்வி தகுதி- உடனே விண்ணப்பிங்க

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை: டிகிரி கல்வி தகுதி- உடனே விண்ணப்பிங்க
Published on

சென்னை,

ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிட்டடு என்பது மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஆகும். நிதி அமைச்சகத்தின் மேற்பார்வையில் செயல்படும் இந்த இன்சூரன்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் 29 பிராந்திய அலுவலகம் மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த இன்சுரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்த விவரங்கள் வருமாறு:

பணியிடங்கள்: உதவியாளர் பணி, மொத்தம் 500 பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 34 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை: இரண்டு கட்ட எழுத்து தேர்வு நடைபெறும். முதல் கட்ட எழுத்து தேர்வு 07.09.2025 மற்றும் இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு 28.10.2025.

விண்ணப்ப கட்டணம்: தேர்வுக்கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 22,405 - 62,265/-வரை வழங்கப்படும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://oicl-cms-media.s3.ap-south-1.amazonaws.com/Advertisement_for_Asstt_Cadre_in_English_1efded0f57.pdf

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com