நிலக்கரி நிறுவனத்தில் வேலை : ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக 200 பணியிடங்கள் உள்ளன.
நிலக்கரி நிறுவனத்தில் வேலை : ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செயல்பட்டு வரும் நிறுவனம் நார்த்தன் கோல்பீல்டு லிமிட்டெடு. நிலக்கரி உற்பத்தி பணியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணி நிறுவனம் : நார்த்தன் கோல்பீல்டு நிறுவனம் (என்.சி.எல்)

காலி பணி இடங்கள் : 200

பதவி : டெக்னீஷியன் (பிட்டர், எலெக்ட்ரீஷியன், வெல்டர் - டிரெய்னி)

கல்வி தகுதி : 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் சம்பந்தப்பட்ட பணி சார்ந்த ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள்.

வயது : 10-5-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு (மாற்றுத்திறனாளிகள் உள்பட).

தேர்வு முறை : கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-5-2025

இணையதள முகவரி : https://www.nclcil.in/detail/173457/recruitment

X

Daily Thanthi
www.dailythanthi.com