மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை: 550 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 550 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியகியுள்ளது.
மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை: 550 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் உள்ளது. மத்திய நிதி அமைச்சத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 550 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை வருமாறு;

பணி நிறுவனம்: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி

காலி பணி இடங்கள்: 550

பதவி: நிர்வாக அதிகாரி

கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, சட்டப்படிப்பு, சி.ஏ., எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட படிப்புகள்

வயது: 1-8-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 21, அதிகபட்ச வயது: 30. 1-8-1995-க்கு முன்போ, 1-8-2004-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல்

முதல் நிலைத்தேர்வு மையம்(தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல்.

இரண்டாம் நிலைத்தேர்வு மையம்: சென்னை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-8-2025

இணையதள முகவரி: https://www.newindia.co.in/recruitment/list

X

Daily Thanthi
www.dailythanthi.com