இஸ்ரோவில் வேலை வாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரோ
Published on

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைகோள்களை ஏவுவது விண்வெளி ஆய்வு போன்றவற்றில் ஈடுபட்டு வரும் இஸ்ரோ, உலக அளவில் விண்வெளித்துறையில் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக வைத்து இருப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது.

இஸ்ரோவில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தேர்வர்களுக்கு பெரிதும் இருக்கும். இந்த நிலையில்தான், இஸ்ரோவின் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7, டெக்னீசியன் 10, பயர்மேன் 1, டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 04.09.2026

X

Daily Thanthi
www.dailythanthi.com