பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை... தமிழகத்தில் மட்டும் 121 பணியிடங்கள்

தேசிய அளவில் மொத்தம் 5,138 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை... தமிழகத்தில் மட்டும் 121 பணியிடங்கள்
Published on

சென்னை,

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2026-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி (அப்ரெண்டீஸ்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழிற்பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேசிய அளவில் மொத்தம் 5,138 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் செயல்படும் வங்கிகளில் மட்டும் 121 இடங்கள் நிரப்பப்படவுள்ளனர். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்: தேசிய அளவில் மொத்தம் 5,138 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 121 இடங்கள் நிரப்பப்படவுள்ளன

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 31.12.2025 தேதியின் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். 02.01.1998 தேதிக்கு பின்னரும், 01.01.2006 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. வயது தளர்வு பின்பற்றப்படும்.

Also Read
பொதுத்துறை வங்கியில் வேலை: 350 காலிப்பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை... தமிழகத்தில் மட்டும் 121 பணியிடங்கள்

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.944 செலுத்த வேண்டும். பெண்கள் ரூ.708, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.236 செலுத்தி சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்; 24.02.2026

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:ஊரக பகுதி / சிறு நகரங்களில் உள்ள கிளைகளில் சேருபவர்களுக்கு ரூ.12,300 மாத ஊதியமாக அளிக்கப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கிளைகள் என்றால் மாதம் ரூ.15 ஆயிரம் அளிக்கப்படும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள்.

Also Read
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை: என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை... தமிழகத்தில் மட்டும் 121 பணியிடங்கள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com