

சென்னை
ரெயில்வேயில் காலி பணியிடங்களில் பணியாற்ற 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)
காலி இடங்கள்: 191
பதவி: தலைமை சட்ட உதவியாளர் (17), அரசு வழக்கறிஞர் (21), மூத்த விளம்பர ஆய்வாளர் (8), இளநிலை மொழிபெயர்ப்பாளர்/இந்தி (79), பணியாளர் மற்றும் நல ஆய்வாளர் (27), அறிவியல் உதவியாளர் (பயிற்சி -3). ஆய்வக உதவியாளர் தரம் III (வேதியியலாளர் மற்றும் உலோகவியலாளர் -36)
கல்வி தகுதி: 12-ம் வகுப்பு, எல்.எல்.பி., முதுகலை பட்டப்படிப்பு, எம்.பி.ஏ.
வயது: 1-1-2027 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயது, 18 முதல் 32 வயது, 18 முதல் 33 வயது, 18 முதல் 35 வயது. 18 முதல் 40 வயது வரை என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, செயல் திறன் தேர்வு, திறன் தேர்வு, மொழிப்பெயர்ப்பு தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-12-2026
இணையதள முகவரி: https://www.rrbapply.gov.in/