திருப்பூரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

திருப்பூர் அமராவதிநகரில் உள்ள 'சைனிக்' பள்ளியில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?
Published on

திருப்பூர்,

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருப்பூர் அமராவதிநகரில் உள்ள 'சைனிக்' பள்ளியில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

பணியிடங்கள்: எம்.டி.எஸ்., 13, வார்டு பாய்ஸ் 3 -உள்பட மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பட்டப்படிப்பு + பி.பிஎட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை -1.5.2026 -தேதியின் படி வயது வரம்பு கணக்கிடப்படும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

சம்பளம்: ரூ.18,000 - 56,900/- (எம்.டி.எஸ் பணிக்கு மட்டும்)

விண்ணப்பிக்கும் முறை: https://sainikschoolamaravathinagar.edu.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Principal, Sainik School, Amaravathinagar - 642 102, Udumalpet Taluk, Tiruppur District.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2026

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com