

சென்னை,
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் (டான்சி) சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள 4 (நான்கு) ஓட்டுநர்கள் மற்றும் 7 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 01.03.2026 காலை-10.00 மணியிலிருந்து 31.03.2026 மாலை 05.00 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம் .
கல்வித்தகுதில், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு :
கல்வித்தகுதி :
டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் அவசியம். அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும். இருசக்கரவாகனம் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்.
சம்பளம் :
ஓட்டுநர் - ரூ.19500 - 62000 / -
அலுவலக உதவியாளர் - ரூ.15700 - 50000 / -
தேர்வு முறை :
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்து தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் கிண்டி, சென்னை-600 032. எண். 28, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032.
தேர்வு அறிவிப்பை பார்க்க : https://www.tansi.tn.gov.in/driver-post-job-vacancy-notice