எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 2,218 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை.. 2,218 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Published on

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு

பணி நிறுவனம்: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (எய்ம்ஸ்)

காலி பணி இடங்கள்: 2,218

பதவி: நர்சிங் ஆபீசர்

கல்வி தகுதி: பி.எஸ்சி. நர்சிங், போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் அல்லது ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி (ஜி.என்.எம்.) டிப்ளமோ. இந்திய நர் சிங் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஜி.என்.எம். டிப்ளமோ படித்தவர்கள் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 13-8-2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 18; அதிக பட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டு கள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு.

முதல் நிலைத்தேர்வு நடைபெறும் தேதி: 12-9-2026

மெயின் தேர்வு நடைபெறும் தேதி: 30-9-2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-8-2026

கூடுதல் விவரங்களுக்கு : https://aiimsexams.ac.in

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com