சென்னை எண்ணூர் துறைமுகத்தில் வேலை: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

எண்ணூரில் உள்ள காமரஜர் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் வேலை: பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள காமரஜர் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

காலிப்பணியிடங்கள்: ஜூனியர் அசிஸ்டண்ட் - 11, ஜூனியர் அக்கவுண்டண்ட் - 03

கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டண்ட் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு பி.காம் பாடப்பிரிவில் முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27.02.2026 தேதிப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு: ரூ.25,250 -50,500 வரை

தேர்வு முறை; கணிணி வழியிலான தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2026 வரை விண்ணப்பிக்கலாம் .

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://kamarajarport.in/

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com