கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மொத்தம் 158 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்பாக்கம் அணுமின் நிலையம்
Published on

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் நகரில் வங்காள விரிகுடா கடற்கரையை அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அணுசக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அணுமின் நிலையத்தில் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் வருமாறு:

பணி விவரம்: மெக்கானிக்கல், சிவில், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிக்கல், பைனான்ஸ் அக்கவுன்ட்ஸ், எச்.ஆர்., உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன்.

மொத்த எண்ணிக்கை : ஐடிஐ 124, டிப்ளமோ 18, பட்டப்படிப்பு 16 என மொத்தம் 158 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,/டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஊதியம்: மாதம் ரூ. 9,600 - 10,900 வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.6.2026

கூடுதல் விவரங்களுக்கு: npcil.nic.in

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com