பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை - ஆயிரம் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க

இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Image Credits: AI
Image Credits: AI
Published on

சென்னை,

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். கடந்த 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் டெல்லியில் அமைந்துள்ளது. நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:

பணி விவரம்: உள்ளூர் வங்கி அதிகாரி

காலியிடங்கள்: 1,000 - தமிழ்நாட்டில் மட்டும் 65 பணியிடங்கள்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகள் அல்லது ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிதி நிறுவனங்களில் அதிகாரியாக குறைந்தபட்சம் 18 மாத கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம்: மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850/- கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 100 கட்டணம் ஆகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://punjabandsind.bank.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 20

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com