

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 60 மேலாளர் மற்றும் துணை மேலாளர் (பாதுகாப்பு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
காலிப்பணியிடங்கள்: மேலாளர் (பாதுகாப்பு) – 60 பணியிடங்கள்
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ராணுவம், கடற்படை, விமானப்படை அல்லது துணை ராணுவப் படைகளில் குறிப்பிட்ட பதவிநிலையில் குறைந்தபட்சம் 5 அல்லது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.10.2026 அன்றைய தேதியின்படி 25 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரம்:- மேலாளர் (பாதுகாப்பு) – ரூ.85,920 முதல் ரூ.1,05,820 வரை.
- துணை மேலாளர் (பாதுகாப்பு) – ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை. மற்ற பிரிவினருக்கு ரூ.750 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 25, 2026.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்ளவும் https://ibpsreg.ibps.in/sbirscooct26/