

சென்னை,
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ-யில் பிஓ (Probationary Officer)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு
பணியிடங்கள்; 1,500
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை: முதற்கட்டத் தேர்வு , முதன்மைத் தேர்வு , உளவியல் மதிப்பீடு குழு பயிற்சி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்ப பதிவு ஜூன் 18 முதல் தொடங்கியுள்ள நிலையில், ஜூலை 8, 2026 வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: ttps://sbi.bank.in/documents/77530/57941/18062026_1_Detailed_Adv.2026.pdf/1f1a9532-8a2f-6e59-08a0-616d62a497b1?t=1781759726353