

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூகோ வங்கியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் பின்வருமாறு:
பதவியின் பெயர்: அப்ரெண்டீஸ்
பணியிடம்: 530. தமிழ்நாட்டில் மட்டும் 21
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்
சம்பளம்: மாதம் ரூ.16,650 வழங்கப்படும்
தேர்வு முறை: ஆன்லைன் வழியாக எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும்
விண்ணப்ப கட்டணம்; பொதுப்பிரிவினருக்கு ரூ.800 கட்டணம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.200 கட்டணம் ஆகும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2026
தேர்வு அறிவிப்பை படிக்க: https://uco.bank.in/job-opportunities