திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை.. 21 காலியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணியிடங்களுக்கு வருகிற 26ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை.. 21 காலியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஒப்பந்த பணியிடங்களில் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் 26.02.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

* பிசியோ தெரபிஸ்ட் - 02

* ஸ்பீச் தெரபிஸ்ட் - 01

* கதிரியக்க நிபுணர் - 01

* யூஎச்.என் / ஏ.என்.எம் - 02

* மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் – 01

* சுகாதார பார்வையாளர் – 01

* சிகிச்சை மேற்பார்வையாளர் – 01

* லேப் டெக்னிஷியன் 02

* பார்மாசிஸ்ட்: 01

* பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II – 06

என 14 வகையான பணியிடங்களில் 21 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏ.என்.எம், டி.எம்ல்.டி, பிஏ.எஸ்.எல்.பி ,12 ஆ வகுப்பு உள்ளிட்டவை. தேர்வு அறிவிப்பில் முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

வயது வரம்பு: 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: குறைந்தபட்சம் 13 ஆயிரம் முதல் அதிகபட்சம் 28 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.02.2026

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dindigul District Health Society, District Health Office, Meenakshinaickenpatti, Dindigul-624002 (Phone Number: 0451-2432817)

தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்க: https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2026/02/17713230147753.pdf

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com