

சென்னை,
இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க மொத்தம் 25,000-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கிராம அஞ்சல் பணியாளர்கள், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் / கிளை போஸ்ட் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும். தேர்வு எதுவும் கிடையாது. இந்த பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
பணி நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் துறை
காலி பணியிடங்கள்: 2,095
பதவி: கிராமின் தாக் சேவக் (ஜி.டி.எஸ்.)
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி. 10-ம்வகுப்பு வரை உள்ளூர் மொழியை படித்திருக்க வேண்டும். கணினி மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.
வயது: 21-9-2026 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயது வரை
தேர்வு முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதி பட்டியல் (மெரிட் லிஸ்ட்), சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப நடைமுறை: 31-8-2026 முதல் 19-9-2026 வரை விண்ணப்பிக்கலாம். 23-9-2026 முதல் 24-9-2026 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
முழு விவரங்களுக்கு : https://indiapost.gov.in/gdsonlineengagement