ரெயில்வேயில் வேலை: 1,688 காலியிடங்கள் - யார் யார் விண்ணப்பிக்கலாம்?

டிக்கெட் எழுத்தர், இளநிலை எழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரெயில்வேயில் வேலை: 1,688 காலியிடங்கள் -  யார் யார் விண்ணப்பிக்கலாம்?
Published on: 

இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை ஆர்.ஆர்.பி எனப்படும் ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், டிக்கெட் எழுத்தர், இளநிலை எழுத்தர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

பணி நிறுவனம்: ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)

காலி இடங்கள்: 1,688

பதவி: வணிகம் பயணச்சீட்டு எழுத்தர் (700), கணக்கு எழுத்தர் - தட்டச்சு செய் பவர் (200), இளநிலை எழுத்தர் - தட்டச்சர் (600), ரெயில் எழுத்தர் (188)

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு

வயது: 1-1-2027 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயது. அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13-11-2026

கூடுதல் விவரங்களுக்கு : https://www.rrbapply.gov.in/

X

Daily Thanthi
www.dailythanthi.com