இளநிலை மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது.
இளநிலை மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடக்கம்
Published on

சென்னை,

இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இதன்படி அகில இந்திய இடங்களுக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அகில இந்திய இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 5 முதல் 13-ம் தேதி வரையும், 3-ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு விவரம், அட்டவணை குறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com