நீலகிரி மாவட்ட மருத்துவமனையில் வேலை: 22 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

நீலகிரி மாவட்ட மருத்துவமனையில் வேலை: 22 காலிப்பணியிடங்கள்
Published on

தமிழ்நாடு மருத்துவத்துறையின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்தா ஆகியவற்றில் காலியாக உள்ள 22 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:

காலிப்பணியிடங்கள்;

ஆடியோலாஜிஸ்ட் - 2, ஆடியோ மெட்ரிக் - 1, தெரபிக் அசிஸ்டண்ட் - 2, எம்.டி.எம் - 3, ரேடியோகிராப்பர் - 1, மருத்துவமனை ஊழியர் - 12 என மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித்தகுதி:

ஆடியோலாஜிஸ்ட் பதவிக்கு செவியுணர்வியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.ஆடியோ மெட்ரிக் பதவிக்கு பள்ளிக் கல்வியுடன், அதற்கான டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும் கணினி இயக்கத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தெரபிக் அசிஸ்டண்ட் பதவியில் நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

பணிக்கு தகுந்தபடி மாறுபடும்: அதிகபட்சமாக ரூ.23,000 குறைந்தபட்சமாக ரூ.ரூ.8,500 வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nilgiris.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்;

விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும். நேரடியாகவோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். விண்ணப்பத்தில் கல்விசான்று நகல்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி;

மாவட்ட சுகாதார அலுவலர்,

எண்.38, ஜெயில் ஹில் ரோடு,

சிடி ஸ்கேன், உதகமண்டலம் - 643001.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

https://nilgiris.nic.in/notice_category/recruitment/

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com