ரெயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்கள் அறிவிப்பு வெளியானது

இந்த பணியிடங்களுக்கு நாளை முதல் வரும் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம்.
image credits: AI
image credits: AI
Published on

இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள டெக்னிஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நாளை முதல் வரும் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: மொத்தம் 6,565

டெக்னிஷியன் கிரேடு 1 சிக்னல்: 323

டெக்னிஷியன் கிரேடு III -6,242

கல்வித்தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பிஇ/பிடெக்,, பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: சிபிடி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்ப கட்டணம்: ரூ.400 செலுத்த வேண்டும், எஸ்சி, எஸ்டி, பெண்கள் உள்ளிட்டோருக்கு ரூ.250.

விண்ணப்பிக்க வரும் ஜூலை 29.07.2026 கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/

X

Daily Thanthi
www.dailythanthi.com