தமிழ்நாடு அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இணைய வழி மாணவர் சேர்க்கை: 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குனர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

இளங்கலை காட்சிக்கலை

இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர்.ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

மாணவர் சேர்க்கை

2026-2027-ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (www.filminstitute.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் 12.05.2026 முதல் 14.06.2026 மாலை 5.00 மணி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடந்து, நிர்வாக காரணங்களுக்காக 21.06.2026 மாலை 05.00 மணி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என்பது இதன் மூலமாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.

1. இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)

2. இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - Bachelor of Visual Arts (Digital Intermediate)

3. இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - Bachelor of Visual Arts (Audiography)

4. இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - Bachelor of Visual Arts (Direction and Screenplay writing)

5. இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு) - Bachelor of Visual Arts (Film Editing)

6. இளங்கலை காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ) - Bachelor of Visual Arts (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ/மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com