

சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. இதன்படி, கலந்தாய்வின் முதல் சுற்று நாளை பகல் 12 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, வரும் 19-ந்தேதி மாலை 5 மணிக்கு ஆன்லைன் கலந்தாய்வு நிறைவடையும் எனவும், 20-ந்தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் 21-ந்தேதி இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும், 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆணை பதிவிறக்கம் செய்யலாம். 23-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.