வேளாண் படிப்புகளில் சேர ஜூலை 7-ம் தேதி இணையவழி கலந்தாய்வு தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வேளாண் படிப்புகள்- அறிவிப்பு
கோப்புப் படம்
Published on

கோவை,

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ஜூலை 7 முதல் 12 வரை இணையவழி கலந்தாய்வு:

இதனைத் தொடர்ந்து, பல்வேறு பட்டப்படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 7 முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாணவர்கள் தங்களின் தரவரிசை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியும்.

செப்டம்பர் 9-ம் தேதி வேளாண் கல்லூரிகள் திறப்பு:

மேலும், வேளாண் கல்லூரிகள் செப்டம்பர் 9-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 27 வரை 4 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் அடுத்தகட்ட செயல்முறைகளுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தொடர்பான தகவல்களை மாணவர்கள் தொடர்ந்து கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com