பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

ஜூன் 25-ந்தேதி முதல் துணைத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று முடிந்தது. 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வருகைப்புரியாத தேர்வர்கள், தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வுகளுக்கு ஜூன் 25-ந்தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவே துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 25-ந்தேதி மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகின்றன. 26-ந்தேதி ஆங்கில பாட தேர்வுகளும், 28-ந்தேதி முதல் இதர பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறுகின்றன. ஜூலை 2-ந்தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. அனைத்து தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 மணிக்கு முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com