தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு ஒத்திவைப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 9 தாலுகாக்களில் 2025-ம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 1.11.2025 முதல் 15.11.2025 வரையிலும் தாலுகா அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து 17.12.2025 (புதன்கிழமை) அன்று கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வும், அதனைத் தொடர்ந்து 2.1.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நேர்முகத் தேர்வும் நடைபெற இருந்தது. இந்த எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அனைத்தும் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com