2,299 கிராம உதவியாளா காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்

காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நடவடிக்கைகளை ஜூலை முதல் வாரத்துக்குள் முடிப்பது அவசியமாகும்.
2,299 கிராம உதவியாளா காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிவாக ஆணையா எம்.சாய்குமா அனுப்பியுள்ளா.

அவரது கடிதத்தின் விவரம்:-

தமிழ்நாடு முழுவதும் காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வட்டார அளவில் செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நடவடிக்கைகளை ஜூலை முதல் வாரத்துக்குள் முடிப்பது அவசியமாகும்.

பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 30 நாள்களுக்குள் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். கிராம உதவியாளா பணிக்கு எழுத்து மற்றும் வாசிப்புத் திறன் அத்தியாவசியமாகும். தேவுக்கான விண்ணப்பங்கள் தேவாகளிடம் பெறப்பட்ட தேதியில் இருந்து 10 தினங்களுக்குள் இந்தத் தேவுக்கான அழைப்புக் கடிதத்தை அனுப்ப வேண்டும்.

தகுதியான அனைத்துத் தேவாகளுக்கும் தேவுக்கான அழைப்புக் கடிதம் சென்றுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு, 21 நாள்களுக்குள் வாசிப்பு மற்றும் எழுத்துத் தேவை நடத்த வேண்டும். இந்தத் தேவு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்ட பிறகு 15 தினங்களுக்குள் நேமுகத் தேவை நடத்த வேண்டும். அதைத் தொடாந்து, தேவு செய்யப்பட்ட தேவாகளின் பெயாப் பட்டியலை வெளியிடலாம்.

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக காலியாகவுள்ள 2,299 பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்டகலெக்டர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com