

இந்திய ரெயில்வே துறையில் காலியாக உள்ள தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளின் (NTPC – பட்டதாரி பிரிவு) கீழ், 3,548 பட்டதாரி நிலையிலான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரெயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் (CEN 06/2026) மூலம் பின்வரும் 4 முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்:
• சரக்கு ரெயில் மேலாளர் (Goods Train Manager) – 2,750 இடங்கள்
• மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சுப் பணியாளர் (Senior Clerk cum Typist) – 371 இடங்கள்
• இளநிலை கணக்கு உதவியாளர் (Junior Accounts Assistant cum Typist) – 300 இடங்கள்
• தலைமை வர்த்தக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர் (Chief Commercial cum Ticket Supervisor) – 127 இடங்கள்
மொத்தம் உள்ள 3,548 காலிப் பணியிடங்களில், சரக்கு ரெயில் மேலாளர் பதவிக்குத்தான் மிக அதிகபட்சமாக 2,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதவிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
• விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்: அக்டோபர் 8, 2026
• விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6, 2026 (இரவு 11:59 மணி வரை)
• தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: நவம்பர் 8, 2026
விண்ணப்பதாரர்கள் ரெயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rrb.indianrailways.gov.in அல்லது நேரடியாக விண்ணப்பிக்கும் தளமான https://www.rrbapply.gov.in என்ற முகவரியை பயன்படுத்தி நவம்பர் 6-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.