எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு: 2,600 பணியிடங்கள்- உடனே விண்ணப்பிங்க

என்ஜினியரிங், மருத்துவம், கணக்கியல் அல்லது பட்டயக் கணக்கியலில் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு: 2,600 பணியிடங்கள்- உடனே விண்ணப்பிங்க
Published on

சென்னை,

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 2,600 வட்டார அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்தும் வரும் மே 29-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 2,600 பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 120 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சம்பளம் மாதம் ரூ.48,480 -வழங்கப்படும்.

கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதெரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்ஜினியரிங், மருத்துவம், கணக்கியல் அல்லது பட்டயக் கணக்கியலில் துறையில் பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.தமிழ்நாட்டில் சென்னை, கேவை, கடலூர், ஈரேடு, கரூர், மதுரை, நாகர்கேவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர். உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com