

புதுடெல்லி,
பொதுத்துறை வங்கி வேலைகளுக்குத் தயாராகும் தேர்வர்கள், தங்களது சிபில் ஸ்கோரை சீராக வைத்திருப்பது மிக அவசியமாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்க சவுத்ரி தெரிவித்துள்ளார். 2024-25 மற்றும் 2025-26 காலகட்டத்தில் வங்கித் தேர்வுகளில் இது ஒரு முக்கிய விதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போது நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேர்வில் வெற்றி பெற்று, வங்கியில் வேலையில் சேரும் நேரத்தில்தான் தேர்வரின் கிரெடிட் ஸ்கோர் சரிபார்க்கப்ப டுகிறது என்றும் குறைந்த சிபில் ஸ்கோர் கொண்டவர்களின் பணிவாய்ப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.