வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை.. 1,007 பணியிடங்கள்

இதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் சிறப்பு அதிகாரி வேலை.. 1,007 பணியிடங்கள்
Published on

சென்னை,

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய விவரங்கள் பின் வருமாறு:

பணியிடங்கள்: சிறப்பு அதிகரி (எஸ்.ஓ)- 1,007 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி: என் ஜீனியரிங் டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. 65 சதவீத மதிப்பெண்களுக்க்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும்.முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் உறுதி செய்து கொள்ளலாம்

வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ.48480 85920/-

தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதன்மை தேர்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தரம்புரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்; 21.07.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.ibps.in/index.php/specialist-officers-xv/

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com